வெளிநாட்டில் வசூலில் சக்க போடு போட்ட 5 திரைப்படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

Leo
Leo

தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு குறைந்தது 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வருகின்றன அதில் ஒரு சில படங்கள் நாம் எதிர்பார்க்காத வசூலை அள்ளிக் குவிக்கும் குறிப்பாக தமிழையும் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல இடங்களில் வசூலிலும் ஒரு சில படங்கள் வெளிநாட்டிலுமே அதிக நாட்கள் ஓடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடுகின்றன அப்படி வெளிநாட்டில் அதிக வசூல் அள்ளிய 5 திரைப்படங்களைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

கபாலி : பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கி அதிக நாட்கள் ஓடி வசூல் வேட்டை ஆடியது வெளிநாட்டில் மட்டும் $ 16.24 மில்லியன் வசூல் செய்தது.

சொந்த மகனுக்கே உதவி பண்ண யோசிக்கும் விஜயா.. விட்டுக் கொடுக்காத அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

பொன்னியின் செல்வன் பார்ட் 1  : வரலாற்று கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம் அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தார் நீளமாக இருந்த காரணங்களால் இரண்டு பாகங்களாக வெளியானது முதல் பாகம் வெளிவந்து 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது வெளிநாட்டில் மட்டும் சுமார் $ 19 மில்லியன் வசூல் செய்தது.

2.0  : ஷங்கர் இயக்Jaகத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கக் கூடிய ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வசூலை அள்ளியது வெளிநாட்டில் மட்டும் சுமார் $ 22 மில்லியன் வசூல் செய்தது.

லியோ படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு கிடைத்த லாபம்.. இத்தனை கோடியா.?

லியோ : விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிக ஆக்சன் எமோஷனல் என இருந்ததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இருப்பினும் வசூரில் ருத்ரதாண்டவம் ஆடியது வெளிநாட்டில் மட்டும் 23.20 மில்லியன் வசூல் செய்தது.

ஜெயிலர்  : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஒட்டுமொத்தமாக 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது வெளிநாட்டில் மட்டும் $ 23.70 மில்லியன் வசூல் அள்ளி இருக்கிறது.