சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல பிரபலங்கள் அதே தொழிலில் இருக்கும் பிரபலங்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம் அந்த வகையில் அழகை பார்க்காமல் இயக்குனர்களை திருமணம் செய்து கொண்ட 5 நடிகைகள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
1. நயன்தாரா : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் சினிமா உலகில் இருக்கும் பலரை காதலித்து இருந்தாலும் எதுவுமே திருமணம் வரை வரவில்லை.. கடைசியாக விக்னேஷ் சிவனை உருகி உருகி ஆறு வருடம் காதலித்தார் கடைசியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி இவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. சினிமா, குடும்பம் என இரண்டையும் இந்த நன்றாக பார்த்து கொண்டு வருகிறது.
2. தேவயானி : ஆரம்பத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் காதல் கோட்டை, பூமணி, சூரியவம்சம் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் இவர் நீ வருவாய் படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் ராஜகுமாரனுக்கும், தேவையானிக்கும் காதல் மலர்ந்தது பின் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
3. ரோஜா : 90 கட்டங்களில் கூட்டி கட்டி பறந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் களம் இறங்கினார். இப்போ ஒரு பெரிய கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். செல்வமணிக்கும், ரோஜாவுக்கும் 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
4. பூர்ணிமா : 80 காலகட்டங்களில் பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்ட இவர் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1984 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
5. சுஹாசினி : நெஞ்சை கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு ரஜினி, பிரபு போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார் திரையுலகில் ஜொலித்த இவர் 1988 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது வரையிலும் இவருடைய வாழ்க்கையை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.