5 Heroes Who Missed Re-Entry: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று கலக்கி வந்த பலரும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி மீண்டும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ரீஎன்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடித்தாலும் முன்பு போல் இருந்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய டாப் 5 ஹீரோக்கள் குறித்த தகவல்.
சுமன்: 80, 90 கால கட்டத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்த சுமன் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி ரஜினியுடன் இணைந்து தீ என்ற படத்தில் நடித்த இவர் சுமார் 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் கொடுத்தார். மேலும் ஏகன், குருவி, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.
மனோஜ்க்கு தரமான பதிலடி கொடுத்த முத்து.! விஜயாவால் சிக்கலில் மாட்டி கொள்ள போகும் ரோகினி..!
கார்த்திக்: 1981ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்த கார்த்தி பிறகு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தார். 90ஸ்களின் பேவரைட் ஹீரோவான கார்த்தி அனேகன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
பாண்டியராஜன்: எதார்த்தமான வசனம், காமெடி, நடிப்பு என ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த பாண்டியராஜன் தொடர் தோல்வியை சந்தித்து வந்தார். எனவே நடிப்பதை நிறுத்திக் கொண்ட பாண்டியராஜன் அஞ்சாதே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் இதில் வில்லனாகவும், விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் காமெடியனாகவும் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரத் பாபு: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சரத் பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக கலக்கி வந்தார். முக்கியமாக ரஜினியின் முத்து, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் வயது முதிர்ச்சியின் காரணமாக பட வாய்ப்புகள் உடைய தொடங்கியது.
சுதாகர்: கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான சுதாகர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் காமெடியானாகவும் நடிக்க தொடங்கிய சுதாகர் சினிமாவை விட்டு விலகினார். மீண்டும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.