அஜித் ரொமான்டிக் சீனில் கலக்கிய 5 படங்கள்.. ஒன்னு ஒன்னும் ஒரு ரகம்

AJITH
AJITH

கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு ஓடுபவர் அஜித் குமார். இவர் ஆரம்பத்தில் பல வெற்றி, தோல்விகளை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து அதிகமாக ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கின்றன கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கூட மிகப் பெரிய ஒரு ஆக்சன் படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் நடித்த 5 காதல் திரைப்படம் குறித்து பார்போம்..

1. காதல் கோட்டை : அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது காதல் கோட்டை தான். இதில் அஜித், தேவயானி இரண்டு பேருமே பார்த்துக் கொள்ளாமல் போனில் பேசிக்கொள்வது மற்றும்  கடிதங்கள் மூலம்  காதலில் விழுந்து விடுவார்கள். கிளைமேக்ஸில் எப்படி சேருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள். படத்தில் அஜித், தேவயானி வரும் ஒவ்வொரு சீனும் அற்புதமாக இருக்கும்.

2. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் : இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக தபு நடித்து இருப்பார் இவர்கள் இருவருக்கும் இடையே சந்திக்கும் காதல் காட்சி, பாடல் போன்றவை ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. மேலும் அஜித் இதில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அசத்தியிருப்பார்.

3. வாலி : இரட்டை வேடத்தில் அஜித் நடித்த முதல் திரைப்படம் இதுதான் இந்த படத்தில் வில்லனாக அஜித் சூப்பராக மிரட்டி இருப்பார் அதேசமயம் அஜித் மற்றும் சிம்ரன், ஜோதிகா வரும் காதல் காட்சி ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் கைதட்டலை வாங்கியது இந்த படம் அப்பொழுது வெளிவந்து அஜித்தின் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

4. பூவெல்லாம் உன்வாசம் : எழில் எழுதிய இயக்கிய இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து பல விருதுகளை பெற்றது இந்த படம் முழுக முழுக காதலை மையமாக வைத்து உருவாகி இருந்தது இதில் ஜோதிகா, அஜித் வரும் சீன்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.

5. ஆசை : வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் இது.. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் அனைத்தும் கலந்து இருந்தது. இதில் சுபலட்சுமி, அஜித்தின் ரொமான்டிக் சீன் மற்றும் காதல் சீன்கள் ரசிகர்களை மத்தியில் துள்ளல் ஆட்டத்தை போட வைத்தது.