காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் விவேக் கலக்கிய 5 படங்கள்.!

vivek
vivek

நடிகர் விவேக்கின் இரண்டாவது நினைவு நாளான இன்று அவர் ஹீரோவாக நடித்த ஐந்து படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

செந்தூர தேவி:- ராமநாராயண இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் செந்தூர தேவி இந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் விவேக் உடன் இணைந்து கனகா, ஷாமிலி, மற்றும் செந்தில் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

நான்தான் பாலா :- இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நான்தான் பாலா. இந்த திரைப்படத்தில் விவேக் உடன் இணைந்து ஸ்வேதா பண்டேகர் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பாலக்காட்டு மாதவன்:- இயக்குனர் எம் சந்திரமோகன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பாலக்காடு மாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விவேக், சோனியா அகர்வால் மற்றும் ஷீலா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

எழுமின்:- வி.பி விஜி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எழுமின் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விவேக் உடன் இணைந்து தேவயானி, அழகப் பெருமாள், மற்றும் பிரேம், ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளின் நலனுக்காகவும் பெற்றோர்களுக்கு விவேக் கூறும் அறிவுரையாகவும் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

வெள்ளை பூக்கள் :- விவேக் இளங்கோவன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெள்ளை பூக்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் அவர்கள் குற்றப்பிரிவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் விவேக் அவர்கள் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இப்படி நல்ல கருத்துள்ள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இவர் நடிகராக மட்டுமல்லாமல் தன்னுடைய காமெடி மூலம் சமுதாய கருத்துக்களை அழகாக கூறக்கூடிய ஒரே நடிகர் என்றால் அது விவேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.