Ajith : அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகயுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய்தத், பிக்பாஸ் ஆரவ் என பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர் தகவல்கள் வெளிவரவில்லை.
ஆனால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்குவது என்றும், பெரும்பாலான காட்சிகள் துபாய் / அபிதாவில் தான் எடுக்கப்படும் என தகவல்கள் வெளி வருகின்றன அஜித்தும் இதற்காக உடல் எடையை குறைத்து கிளீன் ஷேவ் பண்ணி செம்ம மாஸாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
விடாமுயற்சியை படத்தின் சூட்டிங் தொடங்க இருப்பதால் 5 பெரிய இயக்குனர்கள் பெருமூச்சு விட்டு உள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்க 5 இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்..
அந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் சிறுத்தை சிவா. இவர் அஜித்தை வைத்து ஏற்கனவே மூன்று படம் பண்ணிய நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது தற்போது சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து கங்குவா என்னும் ஒரு வரலாற்று படத்தை உருவாக்கி வருகிறார் அதனைத் தொடர்ந்து அஜித் சிறுத்தை சிவா கூட்டணி இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
விஷ்ணுவர்தன் ஏற்கனவே பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை எடுத்து அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவராக மாறி இருக்கிறார் விஷ்ணுவர்தன் ஏற்கனவே சோழர்கால வரலாற்று பின்னணி சம்பந்தப்பட்ட ஒரு கதையை அஜித்திற்கு சொல்லி இருக்கிறார். அதனால் இந்த ஜோடி இணைய கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் தொடர்ந்து அஜித்தை பற்றி பேசி வருகிறார். மேலும் அஜித்திற்கு ஒரு கதையை எழுதி இருப்பதாகவும் கூறி வருகிறார். சுதா கொங்காரா அஜித்தை வைத்து படம் எடுக்க பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் அஜித்தை வைத்து படம் பண்ண அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.