டைரக்சன் நமக்கு செட்டாகாது என காமெடி நடிகராக களத்தில் இறங்கிய 5 இயக்குனர்கள்..! இதுல ஒருத்தர் மட்டும் வித்தியாசம் தான்..!

singam-puli

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளார்கள். இவ்வாறு அவர்களின் நிலை மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் கைகொடுக்காமல் போனதுதான்.

அப்படி தமிழ் சினிமாவில்  இயக்குனராக அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்த பல இயக்குனர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

சிங்கம் புலி இவர் தல அஜித் நடிப்பில் உருவான ரெட் என்ற திரைப்படத்தை இயக்கிய இருந்தவர் அந்த வகையில் இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா மற்றும் சூரிய ஆகிய இருவரையும் இணைந்து மாயாவி என்ற மற்றொரு திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். மேலும் நமது இயக்குனர் சரியான வெற்றி கிடைக்க அதன் காரணமாக நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகர்கள் நடிகராக அறிமுகமாக  ஆரம்பித்துவிட்டார்.

மனோபாலா தமிழ்  சினிமாவில் சிறந்த இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறன் கொண்டவர் அந்தவகையில் இவர் தமிழ் சினிமாவில் ஆகாயகங்கை என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படத்தை இயக்கிய நமது மனோபாலா பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

ரமேஷ் கண்ணா இவர் தல அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் உருவான தொடரும் என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஆரம்பித்தார் அதன்பிறகு படையப்பா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பட்டைய கிளப்பி இருப்பார்

தம்பி ராமையா இவர் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற திரைப்படத்தை இயக்கியவர் இவர் அதன்பிறகு மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் மைனா போன்ற திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து விருது பெற்றுள்ளார்.

ரவி மரியா இவர் தமிழ் சினிமாவில் ஆசைஆசையாய் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் இதனைத்தொடர்ந்து வெயில் பூலோகம் ஜில்லா போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கியிருப்பார்.