என் புள்ள என் புள்ள என சினிமாவில் தூக்கி விட நினைத்து பல்பு வாங்கிய 5 அப்பாக்கள்.! பெரிய இயக்குனராக இருந்தும் தோற்றுப் போன இமயம்..

bharathiraja
bharathiraja

பொதுவாகவே பெற்றோர்கள் என்றால் தனக்கு பின்னாடி தனது பிள்ளைகள் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். தான் செய்யும் தொழிலை பிள்ளைகளும் செய்து அதில் முன்னேற வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதேபோல தான் சினிமாவிலும் தனக்கு கிடைத்தது போல அங்கீகாரம் அவர்களது வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சினிமாவில் உச்சம் தொட்ட இந்த பிரபலங்களின் வாரிசுகள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஐந்து திரை பிரபல தந்தை மகன்கள்.

பாரதிராஜா- மனோஜ் பாரதிராஜா  மண் மனம் மாறாமல் பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பல மொழியிலும் ஜொலித்து வந்தார். இன்றளவும் சீரியல், திரைப்படம் என அனைத்திலும் நடித்தும் வருகிறார். இவரது மகன் நடிகர் மனோஜ் நடிப்பில் வெளியாகிய தாஜ்மஹால் என்ற திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் தொடர்ந்து அல்லி அர்ஜுனா, சமுத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திரையுலகில் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை..

பாக்யராஜ்-சாந்தனு: நடிகர் மற்றும் இயக்குனர் என பல கோணங்களில் திரையுலகில் வலம் வந்தவர் பாக்யராஜ். 80, 90களில் இவர் முன்னணி நடிகராக வலம் வந்தவர். மேலும் தற்போது வரை பல திரைப்படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இவரது மகனான நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அதனைதொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைபேசி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.

பாண்டியராஜன் -பிரித்திவிராஜ்: நடிகர் பாண்டியராஜன் 80, 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் நடிகராக மட்டுமல்ல இயக்குனராகவும் வலம் வந்தவர். இவரது இயக்கத்தில் கைவந்த கலை என்ற திரைப்படத்தின் மூலம் அவரது மகனான பிரித்திவிராஜ் தமிழில் அறிமுகமானார். மேலும் தனது தந்தையின் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை.  ஆனால் இவர் 18 வருடத்திற்கு பிறகு மீண்டும் தற்பொழுது ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமாவது இவருக்கு கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பி வாசு-சக்தி. இயக்குனர் வாசு இன்றுளவும் முன்னணி நடிகர்களை வைத்து பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவரது மகன் சக்தி தமிழில் தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவரும் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை  பிடிக்க தவறினார்

கார்த்திக்- கௌதம்கார்த்திக். கார்த்திக் அக்னி நட்சத்திரம் என்ற பெயருடன் இன்றளவும் நடித்து வருகிறார். இவரும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவரது மகன் கௌதம் கார்த்திக்  ஆரம்பத்திலேயே இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே பெரிய இயக்குனருடன் இருந்ததால் இவர் சினிமாவில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் வை ராஜா வை, தேவராட்டம், மிஸ்டர் சந்திர மௌலி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகராக வலம் வர முடியவில்லை.

இப்படி அப்பாக்கள் இன்றும் சினிமாவில் தங்களுக்கான இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல்  மகன்களும் எப்படியாவது தங்களின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று விடாமல்போராடி வருகின்றனர்.