இயக்குனர் பாலா தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர்களை வைத்து தான் பெரிதும் படங்களை இயக்கியுள்ளார். இருப்பினும் இளம் நடிகர்களிடம் இருந்து தனது தேவையான நடிப்பை வெளி வாங்கிய அசத்துவார். படம் வெளிவந்து அந்த புதுமுக நடிகர்களின் திறமை பேசப்படுவதால் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தினார்கள்.
அதே போலவே தான் நடிகைகள், குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரிடமிருந்து முழு திறமையையும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக சேர்த்துவிடுவார். அவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கி விடுவார் பாலா. அப்படி தமிழ் சினிமா உலகில் இயக்குனர் பாலா இயக்கிய படங்களின் மூலம் நடிகர் நடிகைகள் எப்படி முன்னேறினார்கள் அதேபோல காமெடி அறிமுகமாகி பின் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக பலர் மாறி உள்ளனர்.
சிங்கம் புலி : தமிழ் சினிமா உலகில் பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் நடித்து அறிமுகமானார் சிங்கம் புலி. முதல் படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் அதன்பின் பல்வேறு பட வாய்ப்புகளை கைப்பற்றினர்.
கருணாஸ் : சூர்யா நடிப்பில் உருவான நந்தா திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார் கருணாஸ். இந்த திரைப்படத்தை பாலா தனக்கே உரிய பாணியில் எடுத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கருணாஸ் போலீஸ் வீட்டில் திருடும் காட்சிகள் மற்றும் சூர்யாவுடன் வரும் காட்சிகள் வேற லெவல் இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் உருவானது.
சத்யன் : பாலா தயாரித்த மாயாவி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் என்று கொடுத்தவர் சத்யன். இந்த படத்தில் சூர்யாவுடன் அவர் வரும் காட்சிகள் வேற லெவலில் இருந்தது அதன்பின் வாய்ப்புகள் நிறையாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொட்ட ராஜேந்திரன் : சினிமா உலகில் ஸ்டண்ட் மாஸ்டராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பின் வில்லனாக தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் மொட்ட ராஜேந்திரன். பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில் வில்லனாக மிரட்டி அசத்தினார் அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது.
கிருஷ்ணமூர்த்தி : பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர்களை பார்த்துக்கொள்ளும் மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது.