உடம்பை குறைக்கிறேன் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறிய 5 சினிமா பிரபலங்கள்.! லிஸ்ட் இதோ.

simbu

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மற்றும் படங்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை ஏற்றுவதும் இறக்குவதும் வழக்கம். ஆனால் ஒரு சிலரோ தேவை இல்லாமல் தனது உடலையே ஏற்றி இறக்கி மார்க்கெட்டை இழந்துள்ளனர் ஒரு சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஐந்து நடிகர்கள் பற்றி பார்ப்போம்.

சிம்பு : நடிகர் சிம்பு ஆரம்பத்தில் உடலை பிட்டாக வைத்துக்கொண்டு பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இடையில் அவர் உடல் எடை கூடி நடித்த சில படங்கள் தோல்வியை தழுவின அதை உணர்ந்து கொண்ட சிம்பு தன் உடல் எடையில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோ வரை குறைத்து உள்ளார். இது அவருக்கு பிளஸ் ஆகவும் அமைந்தன. உடல் எடை குறைத்த பிறகு சிம்புவை தேடி பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

simbu
simbu

கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே பல டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் திடீர் என கீர்த்தி சுரேஷ் உடலைக் குறைத்து  பெரிய ஷாக் கொடுத்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு அதிகம் டாப் நடிகர்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

keerthi suresh

ஹன்சிகா மோத்வானி : இவரது பப்லியான தோற்றத்தினால் ரசிகர்கள் மத்தியில் குட்டி குஷ்பூ போல் வளம் வந்தார். ஆனால் ஹன்சிகா திடீரென யாரும் எதிர்பார்க்காத அளவு உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்தில் காணப்பட்டு வருகிறார் இதனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

hansika

சந்தானம் : டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சந்தானம். ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார் ஹீரோவான பிறகு உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சில படங்களில் உடல் எடையை குறைத்தும் நடித்துள்ளார்.

santhanam

விக்ரம் : இவர் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை ஏற்றுவதும் இறக்குவதும் வழக்கம். அந்த வகையில் விக்ரம் ஐ திரைப்படத்தில் அதிக அளவு உடல் எடையை குறைத்து நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் கமிட்டாகும் படங்களுக்கு ஏற்றவாறு உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram