ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர்கள் பற்றியும் சிறப்பு திரைப்படங்கள் பற்றிய செய்திகள் அந்த ஆண்டின் இறுதியில் வெளிவருவது பழக்கம் தான் அந்த வகையில் மக்களின் மனம் கவர்ந்த ஐந்து கதாபாத்திரங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
லால் கர்ணன் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கண்ணன் என்ற திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருப்பார் மலையாள திரையுலகின் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகன் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வலம் வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
சார் பாட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் வேம்புலி கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைந்ததோ அதேபோல இதில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரமும் மிகவும் பிரபலமாக இருந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டது என்றே கூறலாம்.
டாக்டர் திரைப்படமானது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இத்திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யோகிபாபு வை கிங்ஸ்லி இந்த திரைப்படத்தில் கெத்து காட்டி உள்ளார் என்றே கூறலாம்.
ஜெய் பீம் திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படம் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மணிகண்டன் ராச கண்னு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
டிக்கிலோனா இந்த திரைப்படமானது சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே நோயாளியாக தென்பட்டாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.