சினிமா உலகில் வளர என்னதான் திறமை போதுமானதாக இருந்தாலும் அவரை உயர்த்தி விட வேறு ஒருவர் உதவ வேண்டும்.. அப்படி படியாக படிப்படியாக முன்னேறி தற்போது பேரும் புகழையும் அடைந்திருப்பவர் வடிவேலு. அதே அளவிற்கு தற்போது தலைகணமும் அவருக்கு அதிகமாகவே இருப்பதாக அவருடன் நடித்த நடிகர்கள் நடிகைகள் கூறி வருகின்றனர். அதனால் சிலர் வடிவேலு கூட நடிக்கவே கூடாது என முடிவெடுத்து ஓடியும் விட்டனர் அப்படி வடிவேலுவை ஒதுக்கி வைத்து பார்க்கும் ஐந்து பிரபலங்களை பற்றி பார்ப்போம்..
ராஜ்கிரண் : தமிழ் சினிமா உலகில் இன்று வைகைப்புயல் வடிவேலு என்றால் எல்லோருக்கும் தெரியும் அப்படிப்பட்ட வடிவேலுவை சினிமாவிற்கு இழுத்து விட்டவர் ராஜ்கிரன் தான்.. முதலில் என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுக்கு வாய்ப்பை கொடுத்து அழகு பார்த்தார். சரியாக வடிவேலு பயன்படுத்திக்கொண்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக மாறினார். அதன் பிறகு ராஜ்கிரனுக்காக எந்த ஒரு உதவியும் வடிவேலு செய்யவே இல்லை.. கண்டுகொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் : வடிவேலு – விஜயகாந்த் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் ஆனால் ஒரே ஒரு சின்ன பிரச்சனை மிகப்பெரிய அளவில் பெரிதாகி விட்டது அதாவது பல மேடைகளில் விஜயகாந்தை பற்றி தவறாக வடிவேலு பேசினார். அதனால் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேலாக வடிவேலுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அஜித் : இவர் எப்பொழுதுமே பொறுமையை கடைப்பிடிக்க கூடியவர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க கூடியவர் அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கக் கூடியவர் ராஜா படத்தின் போது பல காட்சிகளில் அஜித்தை வடிவேலு வாடா போடா என அழைத்திருப்பார் ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகும் வடிவேலு அஜித்தை அப்படி அழைத்தார் இது அஜித்திற்கு செம கோபத்தை கொடுத்தது அதன் பிறகு அஜித் வடிவேலுவுடன் இணைவதை முற்றிலுமாக தவித்தார்.
தனுஷ் : தனுஷின் படிக்காதவன் திரைப்படத்தின் பொழுது வடிவேலு நிறைய சேட்டைகள் செய்தார் மேலும் வாக்குவாதமும் அடிக்கடி உண்டானது ஒரு கட்டத்தில் தனுஷ் வடிவேலை தூக்கிவிட்டு அவருடைய கதாபாத்திரத்தில் விவேக்கை போட்டு நடித்தார்.
மாதவன் : வடிவேலு – மாதவனும் இணைந்து நடித்த படங்கள் இப்பொழுது வரையிலுமே ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருந்து வந்துள்ளன அந்த அளவிற்கு இவர்களுடைய காமெடி சூப்பராக இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களைப் போலவே மாதவனிடம் தனது வேலையை காட்டினார். ஒரு கட்டத்தில் மாதவன் வடிவேலுவை ஒதுக்கிவிட்டார்.