பொதுவாக சினிமாவை பொருத்தவரை இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் ஒன்றாக வாழ்ந்தாலும் தங்களுக்கு பிடித்தவற்றை செய்து வருவார்கள். அப்படி தொடர்ந்து கண்டிஷன் போட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தவர்களும் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சினிமாவில் மனைவியின் பேச்சை தட்டாமல் இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாக மனைவியின் பேச்சை கேட்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது ஆனால் மனைவியின் பேச்சை மட்டும் கேட்டால் அனைவரும் பொண்டாட்டி தாசன் என கிண்டல் செய்வது வழக்கம் இப்படி இருக்கும் நிலையில் யார் என்ன சொன்னாலும் மனைவி சொல் தான் வேத வாக்கு என வாழ்ந்து வரும் ஐந்து பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.
குஷ்பூ, சுந்தர் சி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் குஷ்பூ பலருடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் முறைமாமன் படத்தை இயக்கிய பொழுது சுந்தர் சி மற்றும் குஷ்புக்கு இடையே காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டனர். சுந்தர் சி மிகவும் அமைதியானவர் எனவே அவர் குஷ்பு பேச்சை தட்ட மாட்டாராம்.
சூர்யா, ஜோதிகா: சூர்யாவிற்கு பெரிதாக மார்க்கெட் இல்லாத பொழுது கூட ஜோதிகா சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வந்தார். அப்பொழுதுதான் நடிகர் சூர்யாவை காதலித்து குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. இந்நிலையில் ஜோதிகாவின் விருப்பத்தை தட்டாமல் அவர் என்ன ஆசைப்படுகிறாரோ அதனை சூர்யா நிறைவேற்றுவாராம்.
சினேகா, பிரசன்னா: தற்போது வரையிலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இடையே அதிக மனக்கவசப்பு இருந்ததாகவும் ஆனால் சினேகா என்ன விஷயம் சொன்னாலும் அதனை ஏற்றுக் கொண்டு பக்குவமாக நடந்து கொள்வாராம்.
ராதிகா, சரத்குமார்: ராதிகா முதல் இரண்டு தருணங்கள் சரியாக அமையாத காரணத்தினால் பிறகு சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். மேலும் ராதிகா சரத்குமாரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராதிகாவிடம் பேசவே சரத்குமார் சில நேரங்களில் பயப்படுவாராம்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய கெரியரில் முன்னேற வேண்டும் என்பதற்காக நயன்தாரா பல உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணத்தினால் நயன்தாரா எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என மறுத்து பேசாமல் விக்னேஷ் சிவன் கேட்டுக்கொள்வாராம்.