இன்ஜினியரிங் படித்தாலும் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் 5 பிரபலங்கள்.! அட இந்த நடிகையும் இஞ்சினியரா.?

actor
actor

சினிமாவில் சாதித்து கட்டி ஐந்து பொறியியல் பட்டதாரி நடிகர்கள். அவர்கள் யார் யார் எந்தெந்த படிப்பு படித்தார்கள் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கார்த்தி:- தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கார்த்தி அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, தம்பி, விர்மன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள க்ரசண்ட் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியல் பட்டத்தையும் முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் :- தனியார் தொலைக்காட்சியின் மூலம் காமெடி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில் இருக்கும் போது மெரினா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு மெரினா திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த திரைப்படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், அயலான், டான், தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள ஜே ஜே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து உள்ளார் அதன் பிறகு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தனது எம்பிஏ  பட்டத்தையும் முடித்துள்ளார்.

கௌதம் மேனன் :- இயக்குனர், நடிகர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கும் நடிகர் என்றால் அவர் கௌதம் மேனன் அவர்கள் தான். இவர் இயக்கிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது அதில்  மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், தற்போது சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் திருச்சியில் உள்ள முகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.

ஆர்யா :- அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஆர்யா, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

பிரியா பவானி சங்கர் :- செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்கள் நடித்து அதன் பிறகு வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் ஒரு சில திரைப்படங்கள் இவருடைய கை வசத்தில் இருக்கிறது. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.