சினிமாவை பொறுத்தவரை திருமணம் என்றால் அவருடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி சில பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் இன்று நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் நிச்சயதார்த்தத்தோடு தங்களது உறவை முடித்துக் கொண்ட ஐந்து பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.
ராஷ்மிகா மந்தானா: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்பொழுது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை கடந்த ஜூலை 3 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தார்கள் ஆனால் இவர்கள் இரண்டு பேரும் பிரிந்ததனால் கல்யாணம் நின்றுவிட்டது அதன் பிறகு தான் ராஷ்மிகா மந்தனா படங்களில் சூப்பராக நடிக்க ஆரம்பித்தார்.
திரிஷா: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற பட்டத்துடன் தனது மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் சினிமாவில் தொடர்ந்து வெற்றினை கண்டு வந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அப்படி இவர் வருண் என்ற தொழில் அதிபரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில் ஆனால் திருமணத்திற்கு பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாது என மாப்பிள்ளை வீட்டில் கண்டிஷன் போட்டதனால் திரிஷா இந்த கல்யாணம் வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்.
விஷால்: ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த விஷால் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பில் படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. இவர் அனிஷாவை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில் பிறகு திருமணம் நின்று விட்டது இதனை அடுத்து விஷால் வரலட்சுமி உடன் காதலில் இருந்து அந்த நிலையில் இந்த உறவு முறிந்து விட்டது.
நயன்தாரா: நடிகை நயன்தாரா பிரபுதேவாவுடன் காதலில் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார்கள் ஆனால் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ராம் லதா பிரச்சனை செய்ததால் நயன்தாரா பிரபுதேவா உடைய திருமணம் நின்றுவிட்டது.
சனம் ஷெட்டி: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி அதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனை காதலித்து அந்த நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது ஆனால் சில காரணங்களினால் இருவரும் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.