தனுஷ் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட 5 திரைப்படங்கள்.! ஒவ்வொன்றும் தனி ரகம்.

Dhanush best 5 movie
Dhanush best 5 movie

Dhanush : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார், இன்று பல முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல் தனுஷ் அவர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது அது மட்டும் இல்லாமல் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

தனுஷ் தன்னுடைய சினிமா பயணத்தை வெறும் 19 வயதிலேயே தொடங்கினார் ஆரம்ப காலகட்டத்தில் அவரின் உடலையும் தோற்றத்தையும் பார்த்து இவரெல்லாம் ஒரு ஹீரோவா என பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய திரைப்படம் தான் காதல் கொண்டேன் இந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தான் ஒரு நடிகர் என நிரூபித்தார். காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பொல்லாதவன் திரைப்படம் தனுஷ் சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது ஏனென்றால் இந்த திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலித்தார் ஆக்சன் ரொமான்ஸ் என இரண்டிலும் கொடி கட்டி பறந்த தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர் பட்டாலம் உருவானது. அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் தனுஷ் பயன்படுத்திய பைக்கை பலரும் வாங்க ஆசைப்பட்டார்கள்.

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் தான் ஆடுகளம் இந்த திரைப்படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து கதை நகர்ந்திருக்கும் மதுரை பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அது மட்டும் இல்லாமல் மேலும் இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றார் தனுஷ் ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றி திரைப்படமாக மாறியது.

இதனை தொடர்ந்து தனுஷ் சுருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மூன்று இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது தனுஷ் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்ததன் மூலம் தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் பொருத்தமாக இருக்கும் என நிரூபித்து காட்டினார் பள்ளி மாணவனாகவும், கல்லூரி பையனாகவும் குடும்ப மனிதராகவும், இந்த திரைப்படத்தில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தினார் தமிழில் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக 3 திரைப்படம் உருவானது.

தனுஷ் மீண்டும் நான்காவது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்த  திரைப்படம் அசுரன் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த அசத்தியிருந்தார் முதியவராகவும் துடிப்பான இளைஞராகவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் தனுஷ் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார் இப்படி தனுஷ் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஐந்து திரைப்படங்களாக இந்த திரைப்படங்கள் பார்க்கப்படுகிறது.