Varalaxmi Sarathkumar : ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கிறது என்றால் ஹீரோவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரமா அல்லது வில்லி கதாபாத்திரமும் இருந்து இருக்கும் அப்படி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் முதல் 5 இடத்தில் இருக்கும் நடிகைகளை பற்றி பார்ப்போம்..
சண்டக்கோழி 2 : சண்டக்கோழி படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான பார்ட் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது படத்தில் விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் பேச்சி நடித்தார் இவருக்கு வரும் மியூசிக் மற்றும் இவருடைய அதிரடியான பேச்சை மற்றும் பார்வையாலையே அனைவரையும் நடுநடுங்க செய்தார்.
கொடி : துரை செந்தில்ராஜ் இயக்கத்தில் தனுஷ் இரட்டை படத்தில் நடித்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட படம் தான்.. த்ரிஷா (ருத்ரா) தனுசுவை காதலித்து வந்தாலும் அரசியலில் பெரிய உயரத்தை எட்ட வேண்டும் என்பதற்காக தனுஷை கொலை செய்வார் அந்த சீன் மிரட்டலாக இருக்கும்..
வல்லவன் : சிலம்பரசன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது படத்தில் நயன்தாரா, சந்தியா, சந்தானம், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்தனர். கீதா கதாபத்திரத்தில் ரீமாசென் வில்லியாக நடித்திருப்பார். ஒரு சீனியில் என்னை நீ காதலிக்கிற இல்ல இவர் சிம்புவை பார்த்து சொல்லுவது இப்ப வரையுமே ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக இருக்கிறது.
பிரதீப்பை வெளியே அனுப்பிவிட்டு சந்தோஷத்தில் இருந்த போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி
திமிரு : அதிரடி ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த இந்த திரைப்படம் விஷாலுடன் இணைந்து வடிவேலு, விநாயகன் மற்றும் பலர் நடித்தனர். இந்த படத்தில் வில்லனை விட வில்லி ஸ்ரேயா ரெட்டி கொடூரமாக நடித்திருப்பார். திமிரு படம் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக இவர் இருந்தார்.
படையப்பா : இப்பொழுது பல நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின் வில்லி நடிப்பை யாராலும் இன்னுமும் முறியடிக்கவில்லை ஏனென்றால் சூப்பர் ஸ்டார் நிகராக அந்த படத்தில் நடித்திருப்பார். படையப்பா பெரிய ஹிட் அடிக்க ரம்யா கிருஷ்ணனும் ஒரு காரணம்..