நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு மண்ணை கவ்விய 5 நடிகைகள் – கல்யாணத்திற்கு பிறகும் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்.!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அண்மையில் நயன்தாரா திருமணம் செய்து கொண்டு கணவர் விக்னேஷ் சிவனுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இணையாக வந்த ஒரு சில நடிகைகள் பெயர்கள் பேசப்பட்டது தற்போது தமிழ் சினிமாவில் அவர்கள் காணாமலே போய் விட்டனர்.  அந்த நடிகைகளை பற்றி பார்ப்போம்.

1. கீர்த்தி சுரேஷ் : இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி உச்ச நட்சத்திரமாக இருந்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் உடல் எடையை குறைத்து நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் தமிழ் பக்கமே தென்படாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் அந்தப் படங்களும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. அதிதி சங்கர் : இவர் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டும் வகையில் இவரது நடிப்பு பாடல் நடனம் போன்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் மற்ற நடிகைகளுக்கான முக பாவனை இவருக்கு இல்லை. அதனால் இன்னும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார் அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களே இவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

3. காஜல் அகர்வால் : தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் எடுத்த உடனே எகிறி முன்னணி நடிகையாக நடித்து வந்தார் ஆனால் திருமணம் செய்து கொண்டு உடனே குழந்தையும் பெற்றுக் கொண்டு தற்போது சினிமா பக்கம் தென்படாமல் இருக்கிறார். 4. தமன்னா : இவர் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது இவருக்கு அதிகம் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம். இருந்தாலும் இவருக்கு ஹீரோயினாக இனி வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.

5. ஐஸ்வர்யா ராஜேஷ்: இவர் சினிமாவில் எடுத்த உடனேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இருந்தாலும் இவருக்கு டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலே இருக்கின்றன. அதனால் தெலுங்கு பக்கம் கூட சென்று விட்டார் மீண்டும் வந்தாலும் இவருக்கு கதாநாயகியாக தமிழில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.