தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் சிலர் அக்கட தேசம் பக்கம் தாவி தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி இருக்கும் 5 நடிகைகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
1. சாய் பல்லவி : பிரேமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய அளவில் பேசப்பட்டவர் சாய் பல்லவி. அதே சமயம் பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தது. அந்த வகையில் தமிழில் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு என் ஜி கே படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட்டார் இப்படி டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த சாய் பல்லவி திடீரென தமிழ் பக்கமே தலைகாட்டாமல் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
2. அஞ்சலி : கற்றது தமிழ் எம் ஏ என்ற படத்தின் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமானார் அதன் பிறகு இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாக மாறி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த அஞ்சலிக்கு சில பிரச்சனைகள் வர தமிழ் பக்கம் நடிக்காமல் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார் தற்பொழுது தமிழில் வாய்ப்புகள் கிடைக்காதால் தொடர்ந்து அக்கட தேசத்திலேயே படம் பண்ணி வருகிறார்.
3. ஸ்ருதிஹாசன் : கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோகளுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தமிழில் பிடித்தார் இப்படி ஓடிய இவர் கடந்த சில வருடங்களாக தெலுங்கு பக்கமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அங்கவும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
4. அமலா பால் : சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு இவர் விஜய், தனுஷ், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து வெற்றி மேல் வெற்றி கண்டார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த ஆடை படம் இவருக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அதன் பிறகு தமிழ் பக்கமே தலை காட்டாமல் பிற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
5. அசின் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இவர் தமிழை தாண்டி பிறமொழிகளான தெலுங்கு, ஹிந்தி பழமொழிகளில் நடித்து வந்தார். அப்படி கஜினி படத்தின் ரீமேக் ஹிந்தியில் உருவானது அந்த படத்தில் நடித்த பிறகு ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.