ஓவராக ஆட்டம் போட்டு தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட 5 நடிகைகள் – அதிலேயும் ஓவியா தான் டாப்..

oviya-
oviya-

சினிமா உலகில் வாய்ப்பு கிடைக்கவில்லை என பலரும் ஏங்கி கொண்டிருக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக அந்த நடிகைகளில் வாய் ஓவராக பேசி தனது பெயரை டேமேஜ் செய்து கொள்வது திமிராக நடந்து கொள்வது மற்றும் சர்சை போன்றவற்றில் மாட்டி   கொள்கின்றனர். அதனால் பட வாய்ப்பு இழந்து தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடுகின்றனர் அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் 5 நடிகைகள் பற்றி தான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்..

1. நடிகை ஓவியா : களவாணி படத்தில் நடித்து என்ட்ரி ஆனார் அதன் பிறகு இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான். அதனால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது மேலும் ரசிகர்களும் பெரிய அளவில் உருவாகினார். இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது தேவையில்லாமல் பேசுவது மற்றும் சர்ச்சையான  படங்களில் நடித்து தனது பெயரை மிகப் பெரிய அளவில் டேமேஜ் செய்து கொண்டார்.

2. மீரா மிதுன் : மாடல் அழகியான இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார். மறுபக்கம் ரசிகர்களுடன் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் உரையாடுவதும் புகைப்படங்களை வெளியிட்டும் ஓடினார் ஆனால் அவ்வப்போது தேவையில்லாமல் டாப் நடிகர்களை இழிவாகப் பேசும் வகையில் அவரது பல வீடியோக்கள் வெளிவந்தது இதனால் அவர் கைது செய்யப்பட்டார் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

3. அமலாபால் : சினிமா உலகில் பலரும் பிரபலமடைந்த பிறகு சர்ச்சையில் சிக்குவார்கள் ஆனால் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கி பிரபலமடைந்தவர் அமலா பால். முதலில் இவர் சிந்து சமவெளி படத்தில் நடித்தார் அந்த படம் மிகப்பெரிய சர்ச்சை படமாக மாறியது ஆனால் அதன் பின் சுதாகரித்துக் கொண்டு தெய்வ திருமகள், வேட்டை, தலைவா போன்ற படங்களை கொடுத்து தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

பிறகு இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணம் குறைந்த நாட்களே தாக்கபிடித்தது. பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன் பிறகு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தனது நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதும் இவரது பெயரை டேமேஜ் செய்தன.

4. ரேகா நாயர் : பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக நடித்திருந்தார். இவர் நடித்த காட்சிகள் அப்பொழுது நல்ல வரவேற்பு பெற்றாலும் ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டது இதற்கு தேவையில்லாமல் அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியது அவரது கேரியர்க்கு அவரே ஆப்பு வைத்து கொண்டது போல் அமைந்துள்ளது.

5. ஆண்ட்ரியா : பின்னணி பாடகி ஆனா இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தாலும் கிசுகிசுவில் சிக்கி கொள்கிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது.