பல திறமையான நடிகைகள் நல்ல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமா உலகம் கொண்டாட மறுத்துள்ளது அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்..
1. ஐஸ்வர்யா ராஜேஷ் : தனது திரைப்பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலுமே டாப் ஹீரோக்களில் நடிப்பது அல்ல பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் இவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமா எதிர்பார்த்த அளவிற்கு கொடுக்கவில்லை.
2. பிரியாமணி : கன்னட நடிகையான இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார் அப்படி எடுத்துக்காட்டு நான் சொல்ல வேண்டும் என்றால் பருத்தி வீரன், ராவணன், சாருலதா போன்ற படங்களில் நடித்து பெயரை சம்பாதித்திருப்பார். இப்படிப்பட்ட நடிகையை இன்று அளவிலும் சினிமா உலகம் கொண்டாட தவறி விட்டுவிட்டது.
3. சாய் தன்ஷிகா : திரையுலகில் பல வருடங்களாக நடித்து வரும் இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் 100% உழைப்பை கொடுத்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன அப்படி இவர் நடித்த பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி போன்ற படங்களில் இவரது நடிப்பு வேற லெவல் எப்படி இருக்கும் ஆனால் இவரை தமிழ் சினிமா கொண்டாட மறுத்து விட்டது.
4. அஞ்சலி : முதல் படமான கற்றது தமிழ் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை தட்டிச் சென்றார் அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், வத்திக்குச்சி போன்ற படங்களில் இவருடன் நடிகை பெரிய அளவில் பேசப்பட்டது இப்படிப்பட்ட நடிகையான அஞ்சலிக்கு பெரிய பாராட்டு சினிமாவில் கிடைக்கவில்லை..
5. பிரியா ஆனந்த் : தென்னி ந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் வரை சென்று பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை இவரை பெரிய அளவில் யாரும் கொண்டாடியதே கிடையாது.