ஹாலிவுட்டில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து கெத்து காட்டி வரும் ஐந்து நடிகைகளை பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ரம்யா கிருஷ்ணன் :- தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா. அதிலும் குறிப்பாக படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி 90களில் இருந்து சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை ரம்யா. 52 வயது ஆகும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது.
சிம்ரன்:- தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். மேலும் நடிகை சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் இருந்த அதே அழகை தற்போது வரையிலும் மெய்டன் செய்து வருகிறார். இவருக்கு தற்போது 46 வயதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா:- 90களில் பிஸியாக இருந்து வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சரியாக படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார் அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்.
அனுஷ்கா செட்டி:- தென்னிந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுடன் பல திரைப்படங்கள் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 41 வயதாகும் அனுஷ்கா செட்டி இப்போதும் அழகு குறையாமல் இருந்து வருகிறார்.
திரிஷா:- 39 வயதாகும் நடிகை திரிஷா தற்போது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார். இவர் தற்போது ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக குந்தவையாக நடித்த திரிஷாவின் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.