Anikha : திரை உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் பலரும் இளம் வயதிலேயே ஹீரோயின் ஆகியுள்ளனர். அதுவும் 15 வயதிலேயே அவர்கள் ஹீரோயின்னாக அறிமுகமாகியுள்ளார்கள் அப்படிப்பட்ட ஐந்து பிரபலங்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்..
1. மீனா : குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் ஹீரோயின்னாக 90களில் கொடி கட்டி பறந்தவர். என் ராசாவின் மனசிலே இப்படத்தில் நடிக்கும் போது அவருடைய வயது 14 என கூறப்படுகிறது.
2. துளசி நாயர் : நடிகை ராதிகாவின் இளைய மகளான இவர் தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று திரை படங்களில் நடித்திருந்தாலும் அதன் பிறகு திரை உலகில் தென்படவே இல்லை இவர் முதலில் தமிழில் நடித்த கடல் திரைப்படத்தின் போது இவருடைய வயது 15 அல்லது 16 வயது தான் இருக்கும் என கூறப்படுகிறது.
3. அனிகா சுரேந்தர் : மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார் குறிப்பாக தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் விசுவாசம் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் உருவாக்கினார் இப்படிப்பட்ட அனிகா சுரேந்தர் திரையுகில் ஹீரோயின்னாக நடிக்கும் போது அவருடைய வயது 15 என சொல்லப்படுகிறது.
4. ரம்யா கிருஷ்ணன் : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பல நல்ல படங்களில் நடித்து இன்றளவும் அசத்தி வருகிறார் இப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன் சினிமா உலகில் வெள்ளை மனசு திரைப்படத்தின் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமானார் அப்பொழுது அவருடைய வயது 15 அல்லது 16 இருக்கும் என சொல்லப்படுகிறது.
5. சாரா : குழந்தை நட்சத்திரமாக தெய்வத்திருமகள் சேவல் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பலரையும் கண்கலங்க வைத்த நடிகை சாரா தற்போது ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்