கொள்கையோடு சினிமாவில் நடித்த 5 நடிகர்கள்.! இன்று வரை பேசப்படும் ஹீரோ

rajini
rajini

Rajini : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்த ஒரு சிலர் தனது கொள்கையும், கோட்பாடு உடன்  தான் படங்களில் நடித்துள்ளனர். அப்படி இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ள 5 நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்..

5. ராமராஜன் : 80, 90 காலகட்டங்களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் ராமராஜன். இவர் அதிகம் கிராமத்து கதைகளையே தேர்வு செய்து நடித்து பிரபலமடைந்தவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படிப்பட்ட ராமராஜன் அவரது படங்களில் மது அருந்துதல், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இருக்காது. புகை, மது காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் நடித்திருக்கிறார்.

4. ராஜ்கிரண் : இவரும் 80 90 காலகட்டங்களில் பிரபல நடிகர் ஆவார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானவர் இவர் நடித்த முதல் படமே வெள்ளிவிழா கண்டது. தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய  மற்றும் குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் இதுவரை இவர் வில்லனாக மட்டும் நடித்ததே இல்லை என கூறப்படுகிறது.

3. டி ராஜேந்திரன் :  இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் நடித்த படங்களில் பெண்கள் மீது கை வைக்க கூடாது என்ற கொள்கையுடன் நடித்திருக்கிறார்.

2. நடிகர் மோகன் : இவர் தான் நடித்த 98% படங்களில் பிளே பேக் சிங்கர் சுரேந்தர் தான் டப்பிங் கொடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருந்தார். அதுவும் அவரது சினிமா கேரியருக்கு நன்றாகவே அமைந்தது.

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  : இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்களில் புகைபிடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் பாபா படத்திலிருந்து தற்போது வரை அவர் நடிக்கும் படங்களில் புகைபிடிப்பதை சுத்தமாக தவிர்த்து விட்டார்.