Vijayakanth : 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகராக வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து ஒரு கட்டத்திற்கு மேல் அரசியல் பிரவேசமும் கண்டு வருகிறார்.. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் 5 சினிமா பிரபலங்கள் யார் என்பதைப் பற்றி பார்ப்போம்..
1. தியாகு : இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக நடித்து பிரபலம் அடைந்தவர்.. இவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். பல பேட்டிகளில் தியாகு விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்று பாராட்டியிருக்கிறார் மேலும் தியாகு விஜயகாந்த் எது சொன்னாலும் கேட்கக் கூடியவராம்..
2. வாகை சந்திரசேகர் : இவர் பல படங்களில் வில்லன் ஆகவும், காமெடியனாகவும் நடித்து வந்தவர்.. வாகை சந்திரசேகர், விஜயகாந்த், தியாகு, மணிவண்ணன் போன்றவர்கள் எல்லாம் ஒரு நண்பர் வட்டாரமாம்.. மேலும் விஜயகாந்த் மீதுயுள்ள மரியாதையால் அவர் எது சொன்னாலும் நாங்கள் கேட்போம் என்று சந்திரசேகர் சொல்லி இருக்கிறார்..
3. மன்சூர் அலிகான் : 80, 90களில் கால் கட்டத்திலிருந்து இப்போ வரையும் படங்களில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.. அண்மையில் கூட லியோ படத்தில் நடித்தார். மன்சூர் அலி கான் கேப்டனின் நெருங்கிய நண்பராம் இவர் செய்யும் அனைத்து பிரச்சனைகளையும் முதலில் கேப்டனுக்கு தான் போகுமாம் பிறகு கேப்டன் ஒரு போன் கால் செய்தால் மன்சூர் அலிகான் அடங்கி விடுவாராம் அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதை வைத்துள்ளவர்..
4. செந்தில் : நகைச்சுவைக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் செந்தில். ஒருமுறை படப்பிடிப்பின் போது செந்திலுக்கு குடிகார கும்பலால் பிரச்சனையை ஏற்பட விஜயகாந்த் தான் முன் வந்து முடித்து வைத்தாராம்..
5. ஆனந்தராஜ் : 80, 90 களில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ்.. இவரும் விஜயகாந்த் பேச்சை தட்டாதவர் எனக் கூறப்படுகிறது..