தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அப்படி ஒரு படத்திற்கு ஹீரோ எப்படி அவசியமோ அதேபோல வில்லனும் ஹீரோ ரேஞ்சுக்கு இருந்தால் தான் அந்த படம் ஹிட் அடிக்கும் அப்படி ஹீரோவை விட அதிகமான வரவேற்பை பெற்ற ஐந்து வில்லன் நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
சஞ்சய் தத் :- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள கே ஜி எஃப் சாப்ட்டர் 2வில் ஒரு முரட்டு தனமான வில்லனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் சஞ்சய் தத். இவர் மூத்த ஹிந்தி நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகத் பாசில் :- நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது என்ன தான் இருந்தாலும் முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகம் வருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் முதல் பாகத்தில் கடைசி நேரத்தில் வில்லனாக கலக்கியிருப்பார் பகத் பாசில்.
விஜய் சேதுபதி:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், நரேன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார் நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ஒரு அதிரடியான வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார் நடிகர் சூர்யா.
கார்த்திகேயா:- இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி கலமையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கார்த்திகேயா.