Vijay Leo : 2023 – ல் வெளிவந்த ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் ஜெயிலர், ஜவான் படத்தைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் தான்.
வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரிலீசுக்கு முன்பு 450 கோடி வசூல் செய்துள்ளது நிச்சயம் வெளிவந்து 1000 கோடி வசூல் செய்யும் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் சிலரோ வாய்ப்பு இல்லை அந்தப் படத்தை சுத்து போட்டு விட்டார்கள் என பலரும் கூறுகின்றனர்.
அது போலவே தான் தற்பொழுது நடக்கின்ற சூழ்நிலைகளும் இருக்கிறது. லியோ திரைப்படத்தை எதிர்த்து மொத்தம் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது தமிழை தாண்டி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் பெரிய ஆகிறது.
இந்த படத்தை எதிர்த்து இந்திய முழுவதிலும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன ஆம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள “பகவந்த் கேசரி” திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது அதே தேதியில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ள “கோஸ்ட்” திரைப்படம் கன்னடாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
அக்டோபர் 20ஆம் தேதி தெலுங்கு டாப் நடிகர் ரவிதேஜா நடித்துள்ள “டைகர் நாகேஸ்வர ராவ்” படம் வெளியாகிறது ஹிந்தியில் அக்டோபர் 20ஆம் தேதி Ganapath திரைப்படம் காலமாக வெளியாகிறது. அக்டோபர் 20 ஆம் தேதி கன்னடத்தில் SSEsideB என்ற படம் வெளியாகிறது மொத்தத்தில் லியோ திரைப்படத்தை எதிர்த்து 5 பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகுவதால் லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..