காமெடி நடிகராக சினிமாவில் ஜொலித்து ஹீரோவாக மாறிய 5 நடிகர்கள்.! வயித்தெரிச்சலில் பிரபல நடிகர் செய்த வேலை…

comedy-actors
comedy-actors

சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட காமெடி நடிகர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் ஈஸியாக பிரபலமாகி விடுகிறார்கள். அவர்களே சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து பிரபலமாகி வருகிறார்கள் அப்படி சினிமாவில் காமெடியனாக ஜொலித்து ஹீரோவாக மாறிய ஐந்து நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

வடிவேலு:- என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் நடிகர் வடிவேலு அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகனாக நடித்து பிரபலமான வடிவேலு அவர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு அவர்கள் காமெடியன் கதாபாத்திரத்தை தாண்டி ஹீரோ கதாபாத்திரத்திலும் காமெடியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான எலி , 23ஆம் புலிகேசி, நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

சூரி :- சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நுழைந்த இவருக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை ஒரு சில திரைப்படங்களில் கூட்டத்தின் ஓரமாக நின்று விட்டு எட்டிப் பார்ப்பது போல ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு வந்த சூரி வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் 50 புரோட்டா சாப்பிட்டு பரோட்டா சூரியாக சினிமாவில் பிரபலமானார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த பரோட்டா சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று சில தகவல் வெளியாகியிருக்கிறது.

கவுண்டமணி:- 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர் இவர் நடிக்காத படங்கலே அந்த சமயத்தில் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பல திரைப்படங்களில் காமெடியில் கதகளி ஆடிய கவுண்டமணி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு:- தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக பிரபலமாகி தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் யோகி பாபு. இவர் தற்போது காமெடியனாகவும் ஹீரோவாகவும் மாறி மாறி நடித்து வருகிறார் அப்படி இவர் ஹீரோவாக நடித்த பன்னிக்குட்டி, மண்டேலா, கூர்கா, உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சந்தானம்:- கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான நடிகர் சந்தானம் அவர்கள் மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் ஒரு ஆழமான இடம் பிடித்தார். அதன் பிறகு இவருக்கு பின்னாடி வந்த சில நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருவதால் வைத்தெருச்ச்சலில் ஹீரோவாக மாறி தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் தில்லுக்கு துட்டு 3 திரைப்படத்தில்நடிக்க இருக்கிறார் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.