நடிகர்கள் சிலர் மார்க்கெட் இருக்கும் காலத்திலேயே பெரும் புகழும் நன்றாக சம்பாதித்துக் கொண்டு அதன் பின்னர் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய்விட்டார்கள். அதேபோல் ஒரு சிலர் பொருளாளர் ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தான் நடித்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தி பிசினஸ் இன் மூலம் தொழில் தொடங்கியிருக்கிறார்கள் அவர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
அப்பாஸ்:- நடிகர் அப்பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் என்றீ கொடுத்தார். அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த அப்பாஸ் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு பிசினஸ் பக்கம் சென்று விட்டார்.
நெப்போலியன்:- நடிகர் நெப்போலியன் அவர்கள் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாலத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் அவர்கள் பட வாய்ப்பு வந்து கொண்டு இருந்தாலும் அதை எல்லாம் மறுத்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி தனது சொந்த தொழில் செய்து வருகிறார்.
வினித்:- நடிகர் வினித் அவர்கள் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் வினித் அவர்கள் பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சினிமாவே வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு சொந்தமாக நாட்டிய பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.
கரண் :- சிறு வயதிலிருந்து சினிமா துறையில் நடித்தவர் நடிகர் காரன். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் என்ற படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். அதன் பிறகு வில்லன் சப்போர்ட்டிங் ரோல் அனைத்து கதாபாத்திரங்களிலும் புகுந்து விளையாடினார் ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த கரன் அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று தற்போது சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
ஹம்சவர்தன் :- சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தோல்வியை தான் சந்தித்தது அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியான புன்னகை தேசம் என்ற படம் மட்டுமே இவருக்கு வெற்றி பெற்று கொடுத்தது. இந்தப் படத்தில் இவருடன் தருண் சினேகா பிரீத்தா குணால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் ஹம்சவர்தன் சினிமாவே வேண்டாம் என்று விட்டுவிட்டு மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.