ஆட்டநாயகன் என நிரூபித்த 5 நடிகர்கள்.. லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய அஜித், விஜய்

jeyam ravi
jeyam ravi

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்த ஐந்து நடிகர்களை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

சியான் விக்ரம் : இவர் தனது படங்களில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும்  அதில் இறங்கி நடிப்பதால் நடிப்பு அரக்கன் என பலரும் இவரை அழைக்கின்றனர். அந்த வகையில் தனது திறமையை அந்நியன், ஐ, சேது என்ன பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இவர் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தார்.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..  2001 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த படம் “தில்” விக்ரம், விவேக், லைலா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். விக்ரம் இந்த படத்தில் ஒரு போலீசாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார். படம் சிறப்பாக இருந்ததால் அப்பொழுது சூப்பர் ஹிட் அடித்தது.

அதே ஆண்டில் வெளியான “காசி” படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் கைதட்டல் வாங்கினார் இந்த படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.  அடுத்ததாக சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜெமினி” இந்த படத்தில் விக்ரம் மிகப்பெரிய ஒரு தாதாவாக நடித்து இருப்பார். அவருடன் இணைந்து கிரண், தாமு  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விக்ரம் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து நம்பர் ஒன் ஹீரோவாக உருமாறினார்.

2. விக்ரம் பிரபு : சிவாஜியை தொடர்ந்து பிரபுவை தொடர்ந்து விக்ரம் பிரபு சினிமா உலகில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் இவரது முதல் படமான கும்கி படம்.. கும்கி யானையை வைத்து மழை வாழ் மக்களை காப்பாற்றுவது தான் இந்த படம் அதேசமயம் இந்த படத்தில் காதல் காட்சிகளும் சூப்பராக இருக்கும் படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து தம்பி ராமையா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அடுத்ததாக இவன் வேற மாதிரி படத்தில் நடித்திருந்தார் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த திரைப்படம் தான் அரிமா நம்பி இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்தது. இந்த மூன்று படங்களும் விக்ரம் பிரபுவுக்கு அடுத்தடுத்த வெற்றியை பெற்று தந்ததால் அவருடைய மார்க்கெட் உச்சத்தை தொட்டது.

3. ஜெயம் ரவி  : தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் ஜெயம் ரவி இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் ஆனால் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு சிறந்த கதைகளை பொறுமையாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் காதல் நிறைந்த படமாக இருந்தது படம் வெளிவந்து ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக ஜெயம் ரவி நடித்த திரைப்படம் “தாம் தூம்” இந்த படத்தில் கங்கணா ரானாவத் மற்றும் ஜெயம் ரவியின் காதல் காட்சி அனைவரையும் கவர்ந்திழுத்தது கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படம்.. விறுவிறுப்பாக ருந்தது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்த திரைப்படம் தான் பேராண்மை ஐந்து மாணவிகளை காட்டுக்குள் அழைத்துச் சென்று அன்னிய சக்திகளை அழித்துவிட்டு திரும்புவது தான் இந்த  படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருந்ததால் வெற்றியை பெற்றது.

4. தனுஷ் : தனுஷ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ. 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் கைகோர்த்து இவர் நடித்த திரைப்படம் பொல்லாதவன் படம் முழுக்க முழுக்க பைக் சம்பந்தப்பட்ட படம் அதேசமயம் காதல், ஆக்சன் போன்ற படங்கள் இந்த படத்திற்கு பிளஸ் ஆக இருந்ததால் படம் நன்றாக ஓடியது அதனைத் தொடர்ந்து மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் “யாரடி நீ மோகினி”..

படத்தில் நயன்தாரா, கருணாஸ், ரகுவரன் போன்றவர்களும் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட ஒரு எமோஷனல் படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக இவர் நடித்த திரைப்படம் நான் படிக்காதவன் சுராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படம் காமெடி மற்றும் ஆக்சன் கலந்த படமாக அமைந்திருந்தது.

5. திரையுலகில் ஹீரோ, வில்லன், குணசத்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்திலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர் சத்யராஜ் இவர் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களையும் கொடுத்தவர் அந்த வகையில் சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் “பிரம்மா” இதில் குஷ்பூ, கவுண்டமணி, பானுப்ரியா பலர் நடித்திருந்தனர் படம் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது அடுத்ததாக ரிக்ஷா மாமா மற்றும் தெற்கு தெரு மச்சான் போன்ற படங்களும் வெற்றி பெற்றது