தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு படத்திற்காக தன்னை அப்டேட் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் 5 நடிகர்கள் படதிற்காக “சிக்ஸ் பேக்” வைத்து நடித்துள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. சூரி : தமிழ் சினிமா உலகில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வரும் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “சீமாராஜா” திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த படத்தில் ஒரு சீனியில் சூரி சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருப்பார்.
2. தனுஷ் : தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகண்டது இவர் “மாரி” படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருப்பார் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனுடன் இவர் போடும் சண்டை செம்ம மாஸாக இருக்கும் அதே சமயம் சிக்ஸ் பேக் பெரிய அளவில் பேசப்பட்டது.
3. சூர்யா : இவர் எப்பொழுதுமே தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைப்படுவார் பல படங்களிலும் அதை காட்டியுள்ளார் குறிப்பாக “ஏழாம் அறிவு” படத்தில் இவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் காட்சி மிரட்டலாக இருக்கும்.
4. அருண் விஜய் : சூர்யாவை தொடர்ந்து உடம்பை செம்ம பிட்டாக வைத்திருப்பவர் நடிகர் அருண் விஜய் இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் காட்டி அசத்தி இருப்பார்.
5. சிவகார்த்திகேயன் : குறுகிய காலத்திலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த மாவீரன் படம் பெரிய வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் தனது 21வது திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து வருகிறார் அதன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.