சினிமாவில் பிரபலமான ஏராளமான நடிகர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்து வந்தவர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்த பல நடிகர்கள் தாங்கள் செய்யும் ஒரு சில தவறுகளால் தங்களுடைய சினிமா கேரியரை மொத்தமாக இழந்து விடுகின்றார்கள். அப்படி மிகவும் முக்கியமான ஒன்றுதான் குடிப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்த நடிகர்களை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
கவுண்டமணி: 80,90 காலகட்டத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த கவுண்டமணி தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்பொழுது இவர் பெரிதாக திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இருந்து வருகிறது. இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த கவுண்டமணி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பிறகு உடல்நலம் சரியில்லாமல் போனதால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
காலபவன் மணி: இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பலமொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அந்த வகையில் குணச்சத்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கேரக்டரிலும் நடித்து வசதி இருந்த இவர் பிறகு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவ்வாறு ஒரு கட்டத்தில் ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
மணிவண்ணன்: தமிழ் திரைவுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களை தந்து இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் மணிவண்ணன். அந்த வகையில் 400கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் காமெடி நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விஜயகாந்த்: 80,90 காலகட்டத்தில் தனக்கான ஸ்டைலின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் தான் விஜயகாந்த் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட்டார். அதே நேரத்தில் குடிப்பழக்கத்திற்கும் ஆளானதால் தற்பொழுது உடல்நல பிரச்சினையினால் மிகவும் அவதிப்பட்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
ஜனகராஜ்: பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து கலக்கி வந்தவர் தான் நடிகர் கனகராஜ் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்த அசத்தி இருந்தார். இவருடைய மெட்ராஸ் பாஷை பலரையும் கவர்ந்த நிலையில் பல இயக்குனர்கள் இவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்த விரும்பினார். இவரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன்னுடைய மொத்த சினிமா பெரியரையும் இழந்துவிட்டார்.