இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு மண்ணை கவ்விய 5 நடிகர்கள்.. ஓவர் ஆட்டம் போட்ட சிம்பு, விஷால்.?

simbu
simbu

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அமைதியாக இருப்பார்கள் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களும் கத்த ஆரம்பித்து விடுவார்கள் அப்படி இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. ஆதிக் ரவிச்சந்திரன் –  சிம்பு : தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருவர் ஆதி ரவிச்சந்திரன் இவர் இயக்கிய  திரிஷா இல்லனா நயன்தாரா  படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து அடங்காதவன் அசராதவன் அஞ்சாதவன் என்ற படத்தை எடுத்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனரை பாடாகப்படுத்தி ஒரு வழிக்கு செய்துவிட்டார் சிம்பு பல கண்டிஷன்களை போட்டு கடைசியில் ஸ்கிரிப்டில்  தலையிட்டு படத்தை வேறு மாதிரியாக கொண்டு போய்விட்டார் இதனால் சிம்புவுக்கும், இவருக்கும் இடையே  கருத்து வேறுபாடுகள் இருந்தது.

2.  வடிவேலு – ஷங்கர் : 23ஆம் புலிகேசி படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து  24 ஆம் புலிகேசி படம் அதிரடியாக தயாரானது இந்த படத்தில் நான் சொல்ற ஆட்களை தான் படத்தில் போட வேண்டும் என தயாரிப்பாளர் ஷங்கருக்கு கண்டிஷன் போட்டு உள்ளார் வடிவேலு ஒரு கட்டத்தில் அவர் கோபமடைந்து  படத்தை அப்படியே நிறுத்திவிட்டார்.

3. சூர்யா – ஹரி  : இருவரும் இணைந்து வேல், ஆறு, சிங்கம் , சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தது. பாலா போலவே ஹரி சூர்யாவை அப்பொழுது ஓடவிட்டு இருக்கிறார் இதனால் இருவருக்கும் இடையே அப்பொழுது சில பிரச்சனைகள் எழுந்ததாம்.

4. சூர்யா  – பாலா  :  வணங்கான் படத்தின் போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சூர்யா படப்பிடிப்பிலிருந்து விலகினார். உடனே சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

5. விஷால் –  மிஷ்கின் : இவர்கள் கூட்டணியில் துப்பறிவாளன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் அதிரடியாக உருவானது படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பெரிய பிரச்சனையாக மாறியது இருவரும் மாறி மாறி பதிலடி கொடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.