நயா பைசா கூட வாங்காமல் நண்பனுக்காக நடித்துக் கொடுத்த 5 நடிகர்கள்.! வில்லனாக மிரட்டிய சூர்யா

surya
surya

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது ஒரு படத்திற்கு பல கோடியை சம்பளமாக பெறுகின்றனர். இப்பவும் படத்தின் கதையைக் கேட்ட உடனே முதலில் பேசுவது சம்பளம் பற்றி தான். அப்படி தற்போது சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் சிலர் நூறு கோடிக்கு மேல சம்பளம் வாங்குகின்றனர். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் நட்பிற்காக ஒரு பைசா கூட வாங்காமல் சில படங்களில் கெஸ்ட் ரோடிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

அப்படி நடித்த ஐந்து நடிகர்களை பற்றி பார்ப்போம்.. 1. இங்கிலீஷ் விங்கிலீஷ் : 2012 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அது முழுக்க முழுக்க ஸ்ரீதேவியுடன் அஜித் கொண்ட நட்பிற்காகவே நடித்துக் கொடுத்ததாம். இதற்காக அஜித் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை ஈட்டி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2. செந்தூரப்பாண்டி : விஜயகாந்த் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் கௌதமி கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். இந்த படத்தை வெற்றியடையச் செய்ய விஜயின் அப்பா சந்திரசேகர் விஜயகாந்தியிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது விஜயகாந்த் டாப் நடிகர் என்றாலும் சந்திரசேகர்காக இந்த படத்தில் காசு வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

3. நாய் சேகர் ரிட்டன்ஸ் : ஆரம்ப கால கட்டத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர். அண்மையில் வடிவேலு நடித்து வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவின் நட்புக்காக அவர் கேட்ட உடன் இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் ஒரே உதவி செய்துள்ளார்.

4. ஹேராம் : கமலஹாசன் இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் ஆனால் இந்த நடிக்க ஷாருக்கான் கமலஹாசனின் நட்பின் காரணமாக சம்பளம் வாங்கவில்லை. 5. விக்ரம் : லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அதிக வசூலை அள்ளியது.

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருப்பார் அதை முழுக்க முழுக்க கமலஹாசன் மேல் இருந்த மரியாதைக்காக இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் அதற்காக சூர்யாவும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.