Chandramukhi 2: பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை அடுத்து தற்பொழுது சந்திரமுகி படத்தில் 450 ஷார்ட்ஸ் காணவில்லை என இயக்குனர் பி வாசு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்திரமுகி 2வில் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க பி வாசு இயக்கத்தில் எம்.எம் கீராவணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் நேரத்தில் சந்திரமுகி 2 செப்டம்பர் 15ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் திடீரென செப்டம்பர் 28ஆம் தேதியாக மாற்றினர்.
இவ்வாறு ஏன் திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாசு விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக திடீரென கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் டெக்னீசியன்கள் 450 சார்ட்ஸ்களை காணவில்லை என்றார்கள். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் நாங்கள் அதை பல இடங்களில் தேடினோம்.
150 டெக்னீசியன்கள் அதை தேடுவதற்கான பணியை செய்தார்கள் அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து எங்களுக்கு அந்த காட்சிகள் கிடைத்தது இதன் காரணமாகத்தான் சந்திரமுகி 2 படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சந்திரமுகி திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதினால் தொடர்ந்து படக்குழுவினர்கள் அனைவரும் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக் கொண்டு வருகின்றனர். அப்படி ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரில் சப்ரைஸ் இருப்பதாகவும் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.