தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் தற்பொழுது அஜித்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் ஒருவர் எனக்கு 44 வயசு ஆச்சு இனி நடிக்க வந்தால் சித்தி கேரக்டர் தான் பண்ணனும் என்று ஓபனாக கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகைகள் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த படம் அவர்களால் சினிமாவில் நிலைத்து நிற்பது மிகவும் கடினம். இவ்வாறு நடித்த தனது சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்களும் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பூஜா. இவர் நடிகர் மாதவனின் ரொமான்டிக் படங்களில் ஒன்றான ஜேஜே திரைப்படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்தத் திரைப்படத்தில் இவருடைய எதார்த்த நடிப்பு, கவர்ச்சியான நடனம், இளமை ததும்பும் அழகு என முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.
எனவே முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்ததால் உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல்,பொறி, ஓரம்போ, நான் கடவுள் என அழகான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும் இரண்டாவது முறையாக இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த நான் கடவுள் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்தது.
திரைப்படத்தை தரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் பூஜாவுக்கு தமிழக அரசு விருது மற்றும் பிலிப்பேர் விருது கிடைத்தது. பிறகு கடைசியாக விடியும் முன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து இவர் கமர்சியல் திரைப்படங்கள் நடித்து வந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட செட்டிலாகி விட்டார். மேலும் இவர் பெரிதாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் கார்த்திக் என்ற ரசிகர் பூஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு காலத்தில் ஒரு போஸ்ட் வாழ்த்து என்று கூறி பகிர்ந்திருந்தார்.
once up on a time there lived a ghost 🏃🏻♂️ pic.twitter.com/OnXodEVtow
— Karthik Swaminathan (@worldofkarthic) July 1, 2022
இதற்கு பதில் அளித்த பூஜா நான் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பதில்லை. என்னை ஞாபகம் வைத்திருப்பதற்கு ரசிகர்களுக்கு நன்றி மேலும் அனைவரும் சிறப்பாக மகிழ்ச்சியாகவும் இருக்க கடவுள் ஆசிர்வாதம் மூலம் இன்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் மீண்டும் நடிக்க வருவீர்களா என்று கேட்டதற்கு ஐயோ,எனக்கு 44 வயதாகிறது மீண்டும் அடிக்க வந்தால் சித்தி கேரக்டர் தான் பண்ணனும் என்று கூறியுள்ளார்.
Akka comeback kodunga .
— Ganesh (@gaajisoprano) July 1, 2022
பொதுவாக எந்த ஒரு நடிகையும் தங்களது வயதை வெளிப்படையாக சொல்லாத நிலையில் பூஜா வெளிப்படையாக தனது வயதை கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.