40 Years Of Vidhi movie : விதி என்ற திரைப்படம் இன்றுடன் வெளியாகி 40 வருடங்கள் ஆகிவிட்டன . சராசரியாக 40 வருடங்களுக்கு முன்பே பெண்ணுரிமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தான் விதி. 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த காலத்து கன்னிப் பெண்கள் விரும்புவது சேலை மாலை என்ற தங்கையின் கேள்விக்கு வேலை என்று முற்போக்கு பேசும் பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ராதா. ஜெய்சங்கர் வக்கீல் டைகர் தயானதியாக நடித்திருந்தார் இவர் மோகனின் அப்பா அதேபோல் பட்டமாக மனோரமா நடித்திருப்பார்.
நீதிமன்ற காட்சிக்காகவே இந்த திரைப்படம் வெள்ளி விழா கண்டது ஃபிளாஷ்பேக் காட்சி பள்ளி சிறுவன் சுரேஷ் பரிசு வாங்குவதில் ஆரம்பித்து பழைய வாழ்க்கைக்குள் போகும் திரைப்படம் பணக்கார வீட்டுப் பிள்ளையான ராஜா ராதாவை துரத்தி துரத்தி காதலிப்பார். முதலில் ராஜாவை தவிர்ப்பார் ஆனால் பிறகு அவரின் காதல் வலையில் விழுந்து விடுவார்.
ராஜாவை நம்பி ராதா தன்னையே அவனிடம் இழந்து விடுவாள் அதன் பிறகு ராஜா ராதாவை திருமணம் செய்ய மறுப்பார் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார் அதுமட்டுமில்லாமல் ராதா கர்ப்பம் ஆகிவிடுவார் உடனே வக்கீல் சகுந்தலாவிடம் செல்வார் .
ராஜாவுக்காக அவரை என் அப்பா டைகர் தயாநிதி ராஜாவிற்காக வாதாடுவார் ராஜா ராதா தன்னை மயக்கி தன்னிடம் தவறாக நடந்து கொண்டது போல் அப்பாவி போல் கூண்டில் ஏறி பேசுவார் அப்பொழுது ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ராதா தன்னுடைய மகளாக இருந்தால் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பேன் என பேசுவார்கள்.
அதேபோல் நீதிமன்ற காட்சியில் சகுந்தலா பட்டமாவின் வாயிலிருந்து ராஜாவின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வருவார் அந்த காட்சிக்குப் பிறகு திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் இணைந்து உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையும் அவமானமும் பெண்ணுக்கு மட்டுமே, தவறு செய்த ஆண்கள் எளிதாக தப்பி விடுகிறார்கள் இன்பத்தில் பங்கு கொள்ளும் ஆண்கள் பாவத்தில் ஏன் பங்கு கொள்வதில்லை என நீதிமன்றத்தில் சகுந்தலா வாதாடுவார்.
அதேபோல் தான் வளர்க்கும் மகள் என்னுடைய மகள் தான் அதற்கு அப்பா டைகர் தயாநிதி தான் என கண்ணீருடன் சகுந்தலா கூறிவிடுவார் அந்த காலத்திலேயே நீதிமன்ற காட்சிகள் பெண்களிடையே மிகவும் பிரபலம் எப்படியாவது சகுந்தலாவிடம் தோத்து விடக்கூடாது என ராதாவை கூண்டில் ஏறி கேட்கக்கூடாத கேள்வியை டைகர் தயாநிதி கேட்பார் அப்பொழுது ராதா ரகசியமாக ராஜா பேசியதை ரெக்கார்டிங் செய்து கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் அதன் பிறகு தான் ராஜாவுக்கு திருமணம் செய்து கொள்ள உத்தரவிடும் நீதிமன்றம்.
ஆனால் ராதா நான் ராஜாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கிடையாது என்னுடைய குழந்தைக்கு அவர்தான் அப்பா என்பதை புரிய வைப்பதற்காகவே நீதிமன்றத்தை நாடினேன் என கூறி படத்தை முடிப்பார்கள்.
இந்த படம் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது ஒரு காலகட்டத்தில் விசேஷ நாட்களில் குழாய் கட்டி ரேடியாவில் பாட்டு போடுவார்கள் ஆனால் அப்பொழுதைய காலகட்டத்தில் விதி படம் தான் ரேடியோ செட்டில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த அளவு மிகவும் புகழ்பெற்ற திரைப்படம் இந்த திரைப்படம்.