பொதுவாக தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டு பல படங்களை தயாரித்து வருடம் வருடம் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வதால் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் வசூல் சாதனையை அடைந்துவிடும். ஆனால் கொரோனா பிரச்சனையினால் படங்கள் தியேட்டரில் ரிலீசாக கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டது.
எனவே அனைத்து படங்களும் நேரடியாக அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி போன்ற ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானது.
கொரோனா பிரச்சனைக்கு பிறகு வெகு மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் திரைப்படம் தான் பொங்கலை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது.
இன்னிலை OTT வழியாக வெளியிட்ட திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற முழு லிஸ்டை தற்போது தெரிந்து கொள்வோம்.
ஜகமே தந்திரம் – 55 கோடி( நேரடி OTT வெளியீடு)
2 பாயிண்ட் 0 – 54 கோடி
சூரரைப்போற்று – 42கோடி
மாஸ்டர் – 40கோடி