பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஹிட் என்று அடைந்துள்ளது என்றால் அந்த திரைப்படத்தின் வசூலை பொருத்து தான் அதனை மதிப்பிட்டுக் கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தருகிறது. நல்ல கதை உள்ள திரைப்படங்கள் ரசிகர்களிடைய நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே கொரோனா சூழ்நிலை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டது இந்த நிலையில் சினிமா துறையும் மிகவும் பாதிக்கப்பட்டது சினிமா துறை மீண்டும் தற்போது தான் தலை நிமிர்ந்து வருகிறது. தற்பொழுது பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2022ல் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது பிரபல விநாயகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இந்த தகவலை கூறியுள்ளார். இதில் முதலாவதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளது இந்த திரைப்படத்தை மணிரத்தினம் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்திருந்தார்கள்.
இரண்டாவதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மைனா நந்தினி சிவானி, பகத் பாஸில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மூன்றாவதாக பீஸ்ட் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டுமில்லாமல் நல்ல வசூலையும் பெற்றது என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
நான்காவதாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகிய வலிமை திரைப்படம் இந்தத் திரைப்படம் நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் அதிக லாபத்தை கொடுத்துள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.