சூர்யா நடிக்க தெரியாமல் மொக்கை வாங்கிய 4 திரைப்படங்கள்.. பரிதாபப்பட்ட ரஜினி.!

surya
surya

Surya : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் பையன் என்பதால் ஈசியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. அப்படி சூர்யா நடிக்க தட்டு தடுமாறிய திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்..

நேருக்கு நேர் : நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த இந்த திரைப்படத்தை வசந்த் ரவி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்கும் பொழுது சூர்யாவிற்கு கேமராவை பார்த்து கூட நடிக்க தெரியாமல் இருந்ததாம் இது விஜய் மற்றும் சிம்ரன் மத்தியில் பெரிய அசிங்கமாக போனது.

சந்திப்போமா : சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பிரீத்தா விஜயகுமார், சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். காதல் படமான சந்திப்போமா திரைப்படத்தில் பிரீத்தாவுக்கு இணையாக சூர்யா நடிக்க முடியாமல் திணறினாராம்.

பெரியண்ணா : சூர்யா நடித்த இந்த திரைப்படத்தில் கேப்டன் தான் சூர்யாவிற்கு நடிப்பு கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு பாடல் பாடியிருப்பார் ஆனால் அந்த பாடலுக்கு சூர்யாவால் சரியாக நடனம் கூட ஆட தெரியவில்லை.

பூவெல்லாம் கேட்டுப்பார் : சூர்யாவிற்கு முதல் ஹிட் கொடுத்த திரைப்படம் இவருடன் இணைந்து ஜோதிகா நடித்திருப்பார். சூர்யாவின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு இருந்தது.

காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் சூர்யாவை முதலில் சிவகுமாரின் பையன் என ஆவலாக பார்த்தேன் பின்பு இந்த பையனுக்கு டான்ஸும், நடிப்பும் வரவில்லை என முதலில் பரிதாப பட்டதாக கூறினார். ஒரு கட்டத்தில் அனைத்து நன்கு கற்று தனது திறமையை வெளிக்காட்டி பெற்றார்.