தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த ரசிகர்களுக்காகவே அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இப்பொழுது தனது 61 வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சினிமா உலகில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அஜித் ஒரு சில நல்ல கதைகள் இருந்தும் அதை தவற விட்டுள்ளார் அப்படி அஜித் கேரியரில் தவறவிட்ட முக்கியமான படங்கள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. வசந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் நேருக்கு நேர். இந்தப் படம் அப்பொழுது வெளிவந்தே வெற்றியை பெற்றது இந்த படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள் அதில் அஜித்தையும், விஜயையும் நடிக்க வைக்க முதலில் பிளான் போட்டனர் ஒரு சில காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டது பின் திடீரென இயக்குனருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அஜித் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு சூர்யாவும், விஜய்யும் இணைந்து அந்த படத்தில் நடித்து அசத்தினர்.
2. இயக்குனர் சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் ஆகிய படங்களை இயக்கினார் அடுத்தது அஜித்தை வைத்து ஜெமினி படத்தை எடுக்க அதிகம் ஆசைப்பட்டார் ஆனால் அஜித் அந்த சமயத்தில் சிங்கம் புலி சொன்ன ரெட் படத்தின் கதையை கூறி இருக்கிறார் ஜெமினி கதையுடன் ஒப்பிடும்போது ரெட் மாஸ் ஆன கதையாக இருந்ததால் அஜித் ஜெமினிக்கு நோ சொல்லிவிட்டாராம்..
3. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த திரைப்படம் நியூ. அஜித்தும்,ஜோதிகாவும் இந்த படத்தில் நடிக்க இருந்தனர் ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப் போனது பின்னர் இந்த படத்தில் இருந்து விலக எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்தாராம்.
4. பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் நான் கடவுள் இந்த படத்திற்காக அஜித் மூடியை வளர்த்து நடிக்க ரெடியாக இருந்தார் ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாக் பின் அந்த படத்தில் இருந்து அஜித் விலகியதாக கூறப்படுகிறது.