“ஜெயிலர்” வசூலுக்கு முடிவு கட்ட களத்தில் குதித்த 4 படங்கள்.! சீறுமா சின்ன படங்கள்

Jailer
Jailer

Jailer : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சட்டப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 560 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. ஜெயிலர் படத்தை எதிர்த்து கடந்த வாரம் ஜிவி பிரகாஷின் அடியே, ஆதியின் பாட்னர் என நான்கு படங்கள் வெளியாகின.

ஆனால் ஜெயிலர் படத்தின் வசூலை யாராலும் தடுக்க முடியவில்லை அதனை தொடர்ந்து இந்த வாரம் ஜெயிலர் படத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பல்வேறு டாப் நடிகரின் படங்கள் ரிலீஸ் ஆகின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் சமந்தா.  யசோதா, சாகுந்தலம் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தேவர கொண்டவுடன் கூட்டணி அமைத்து “குஷி” திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார் அண்மையில் இந்த படத்தின் டிரைலர் போன்றவை வெளிவந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

2. டிடி ரிட்டன்ஸ் படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் “கிக்”. கன்னடத்தில் வெளியான லவ் குரு, கானா பஜானா போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் கிக் படம்  யு/ஏ சான்றிதழ் பெற்ற படமாக உருவாகியுள்ளது படத்தில் சந்தானத்தின் இணைந்து தம்பி ராமையா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக திரைக்கு வர உள்ளது.

3. சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து அவரது நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய படம் தான் “பரம்பொருள்” இந்த படத்தை அரவிந்த் ராஜ் இயக்கிய உள்ளார் படத்தில் சரத்குமார் உடன் இணைந்து amitash pradhan, amithash மற்றும் பலர் நடித்துள்ளனர் படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது.

4. சந்தானம்  கடைசியாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இறுதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி ஜீ 5 போட்டி OTT வெளியாக உள்ளது.

5. தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள “கருமேகங்கள் கலைகின்றன”. இந்தப் படத்தில்  அதிதீபாலன் மம்தா மோகன் தாஸ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, யோகி பாபு, இயக்குனர் கௌதமேனன், ஆர் பி உதயகுமார்,  எஸ் ஏ சந்திரசேகரன் உள்பட பலர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக திரையில் வெளியாக உள்ளது.