நடிகர் சூர்யா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டது. இதனால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சந்தோஷத்தில் சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். பாலாவுடன் இணைந்து வணங்கான் எனும் படத்தில் நடித்து வந்த சூர்யா தற்போது தனது அடுத்த 44வது படத்திற்கான பூஜையை தொடங்கியுள்ளார். ஆம் நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடல் இணைந்து அடுத்த படத்தின் பூஜையை போட்டு தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் மற்றும் ஹீரோயின்னாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மற்றும் சூர்யாவின் 44வது படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இதற்கு முன் சூர்யாவின் பல படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.
அந்த வகையில் சூர்யாவின் இந்த 42 வது திரைப்படத்தின் பாடல்களும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சூர்யாவின் 42 வது படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகிய நிலையில் தற்போது இந்த படத்தில் இணைய உள்ள இன்னும் சில நபர்கள் குறித்தும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆனந்தராஜ் மற்றும் கோவை சரளா ஆகிய நான்கு பிரபலங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நான்கு பேருமே படங்களில் சிறப்பாக காமெடி பண்ணக்கூடியவர்கள் அதனால் இந்த படத்தில் காமெடி வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.