தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் குறைவு இதில் சிவாஜி அடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் வெற்றிகரமாக நடித்த வருகிறார். படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி ருசிக்கும் என இப்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் கணக்கு போட்டுள்ளனர்.
இப்படி திரை உலகில் வெற்றி கண்டு வரும் உலகநாயகனுடன் நடிக்கவே பல நடிகர், நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அது அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை ஒரு சில சிறந்த நடிகர், நடிகைகள் மட்டுமே கமலுடன் இணைந்து நடித்துள்ளனர் அந்த வகையில் கமலின் படங்களில் அதிகம் நடித்த நான்கு நடிகர்களை பற்றி தான் நாம் இப்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..
1. நாசர் : கமலுடன் சேர்ந்து அதிக படங்கள் நடித்த அவர் நாசர் தான்.. தேவர் மகன், அன்பே சிவம், உத்தம வில்லன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல் இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பு திறமை தான் இவர் கமலுடன் அதிகமாக நடிக்க காரணம் என சொல்லப்படுகிறது..
2. நாகேஷ் : முதலில் காமெடியன்னாக பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர் ஒரு கட்டத்தில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார் அப்படி கமலுடன் இவர் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், நம்மவர் என பல படங்களில் கமலுக்கு இணையாக நடித்து அசத்தினார்.
3. சந்தான பாரதி : தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயரை சம்பாதித்தவர் இவர் கமலின் நெருங்கிய நண்பரும் கூட இவர் கமலின் அன்பே சிவம், மைக்கேல் மதன காமராஜ், மகாநதி, தசாவதாரம், விக்ரம் என பல படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. டெல்லி கணேஷ் : எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக நடித்துக் கொடுக்கக்கூடியவர் டெல்லி கணேசன். இவரின் நடிப்பு திறமையை பார்த்து கமல் தனது படங்களில் நடிக்க வைத்தார் அந்த வகையில் இவர் அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், நாயகன், தெனாலி, மைக்கேல் மதன காமராஜன் என பல படங்களில் கமலுடன் சேர்ந்து நடித்துள்ளார். கமலின் பல படங்களில் இந்த நான்கு பேரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.