அஜித் தனது திரை பயணத்தில் தவறவிட 4 பெரிய பட்ஜெட் படங்கள்.! அதை நினைத்து புலம்பும் ரசிகர்கள்

Ajith
Ajith

Ajith : இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தான் அந்த படங்களும் வெளிவந்து வெற்றியும் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல், அர்ஜுன்,விக்ரம் போன்ற பல டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்ட ஷங்கர் இதுவரை அஜித்துடன் மட்டும் இணையும் வாய்ப்பு நடக்காமலே போய்விட்டது.

ஷங்கருக்கு பிடித்த நடிகரே அஜித் தானாம் அஜித்துக்காக நான்கு பிரம்மாண்ட கதைகளையும் சங்கர் தயார் செய்து இருக்கிறார் ஆனால் இருவரும் இணையும் வாய்ப்புகள் கூடவில்லை, அது ஏன் என்பதை பார்ப்போம்.. பிரசாந்த் நடிப்பில் ஹிட் அடித்த ஜீன்ஸ் படத்தின் கதையை முதலில் ஷங்கர் அஜித்திற்காக தான் தயார் செய்து அஜித்திடம் கூறி இருக்கிறார்.

ஜூம் பண்ணி பாத்தா மூஞ்சில இருக்கிற மொத்த சுருக்கமும் தெரியுது.. 50 வயதில் 20 வயது பெண் போல் ஃபோட்டோ ஷூட்! ஐஸ்வர்யா ராயை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆனால் அப்பொழுது அஜித் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் கால் சீட் கொடுக்க முடியவில்லை பிறகு இந்த வாய்ப்பு பிரசாந்திற்கு சென்றது. இதைப்போல் அடுத்து முதல்வன் படத்தின் கதையையும் ஷங்கர் அஜித்திற்காக தான் தயார் செய்தாராம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என அஜித் சொல்லி விட்டார்.

பிறகு ஷங்கர் விஜய்யை நாடி இருக்கிறார் அவரும் இந்த படத்தில் நடிக்க மறுக்க அடுத்ததாக இந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு சென்றது.. அடுத்து ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சிவாஜி மற்றும் எந்திரன் படத்தின் கதையையும் ஷங்கர் அஜித்தை மனதில் வைத்து தான் உருவாக்கி இருக்கிறார் ஆனால் இந்த இரண்டு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்பதால்..

‘லியோ’ ட்ரெய்லரால் வெடித்தது புதிய சர்ச்சை.. போலீஸ் புகார்

படம் தோல்வி அடைந்து விட்டால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு அஜித் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம், அஜித் தவறவிட்ட இந்த நான்கு படங்களுமே வேறொரு ஹீரோ நடித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. இனிவரும் காலங்களில் ஆவது அஜித் மற்றும் ஷங்கர் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.