Rajkiran : சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் படங்களின் கதாபாத்திரத்திற்காக இயக்குனர் என்ன சொன்னாலும் நடித்தே ஆக வேண்டும்.. ஆனால் அதிலும் ஒரு சில நடிகர்கள் இது மாதிரி நான் நடிக்கவே மாட்டேன் என்று கொள்கை, கோட்பாடுகளோடு இருந்திருக்கின்றனர் அவர்கள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்..
1. ராமராஜன் : 80 – களில் பிரபல நடிகர்களில் ஒருவரான ராமராஜன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு பல்வேறு சிறந்த படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலம் அடைந்தவர்.. நம்ம ஊரு நம்ம நாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு இவர் நடித்த செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், அம்மன் கோவில் வாசலிலே போன்ற சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிக்கும் படங்களில் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் கொண்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கொள்கையோடு நடித்திருக்கிறார்..
2. ராஜ் கிரண் : 80, 90 களில் பிரபல நடிகரான ராஜ்கிரண் நடிகராகவும் மற்றும் துணை நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று கொள்கை மற்றும் கோட்பாடு இருந்தவர் ஆவார்..
3. டி. ராஜேந்திரன் : சினிமா உலகில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நடிகர் போன்ற பன்முகம் கொண்டவரான டி ராஜேந்திரன் இதுவரை நடித்த படங்களில் பெண்களை தொட்டு நடிக்கும் காட்சிகளில் நடித்ததே கிடையாது..
ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாதவியின் மறுபக்கம்…
4. மைக் மோகன் : 80, 90 களில் பிரபல நடிகரான மைக் மோகன் அதிக ஹிட் கொடுத்து இருக்கிறார். இப்ப கூட தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரை நடித்த எந்த படங்களிலுமே அவரது சொந்த குரலை பயன்படுத்தியது இல்லையாம்..