திரை உலகில் இருக்கும் நடிகர்கள் வித்தியாசமான படங்களை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டுவது வழக்கம்.. அந்த வகையில் ஆக்சன் காதல் சென்டிமென்ட் என பல படங்களில் நடித்திருக்கின்றனர். அதே போல ஒரு சில நடிகர்கள் சண்டையிடுவதிலேயே வித்தியாசம் பார்ப்பார்கள்
அந்த வகையில் புதுமையாக கொடுப்பதாக நினைத்து விலங்குகளுடன் சண்டை போட்டு நடித்து இருக்கின்றனர். அவர்களைப் பற்றிதான் தற்பொழுது விலாவாரியாக பார்ப்பது இருக்கிறோம்.. 1. சண்டைக் காட்சிகளில் மிக ஆக்ரோஷமாக அடிக்கக்கூடியவர் விஜயகாந்த் இவர் எதிரிகளை சர்வ சாதாரணமாக அடித்து பிரித்தெடுப்பார்
ஆனால் வேங்கையின் மைந்தன் படத்தில் இவர் சிங்கத்துடன் கட்டி புரண்டு செம்ம மாஸாக சண்டை போட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 2. ரஜினிகாந்த் சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஆக நடிக்க கூடியவர் இவர் சிவா திரைப்படத்தில் சிறுத்தை உடன் சண்டை போட்டு இருப்பவர். அது பெரிய அளவில் பேசப்பட்டது பிறகு அன்னை ஒரு ஆலயம் திரைப்படத்தில் சிங்கத்துடன் சண்டை போட்டு இருப்பார்.
3. பிரபு நடிப்பில் வெளியான பொண்ணு பார்க்க போறேன் திரைப்படத்தில் சிறுத்தையுடன் சண்டை போட்டு வெற்றி கண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 4. கத்திச்சண்டை போடுவதில் மிகவும் புகழ் பெற்றவர் எம்ஜிஆர் இவர் பறக்கும் பறவை திரைப்படத்தில் புலிவுடன் மோதி வெற்றி பெற்று இருப்பார் அந்த சண்டையை அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படி ஒவ்வொரு டாப் ஹீரோக்களும் இந்த மாதிரி மிருகங்களுடன் சண்டை போட்டும் வெற்றி கண்டுள்ளது அப்பொழுது புதுமையாக பேசப்பட்டது ஆனால் தற்பொழுதைய காலகட்டத்தில் இதை நினைத்துப் பார்த்தாலே காமெடியாக தான் தோன்றுகிறது.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.