3வது நாள் வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.! எத்தனை கோடி தெரியுமா?

jailer
jailer

Jailer Movie: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனையை நடத்தி வருகிறது. அப்படி ஜெயிலர் படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில்  எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் படும் தோல்வியினை சந்தித்தது. ரஜினி ரசிகர்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். எனவே வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்தார். அப்படி ஜெயிலர் திரைப்படம் அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஜெயிலர் படம் கடந்த 20ம் தேதி அன்று வெளியான நிலையில் வெளியான முதல் நாளே வசூலை குவித்தது. இதனை அடுத்து விடுமுறை நாளான இன்று மேலும் வசூலை குவிக்க இருக்கிறது. இந்நிலையில் வெளியான மூன்று நாட்களின் முடிவில் ரூபாய் 210 கோடியை கடந்துள்ளதாம். தற்போது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். அப்படி ஜெயிலர் படத்தின் 4வது நாளான என்று 280 கோடியை கண்டிப்பாக ஜெயிலர் படம் வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வரும் நாட்களில் மேலும் வசூல் அதிகரித்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதியில் ஜெயிலர் 500 கோடியை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் ரஜினி தன்னுடைய 72 வயதிலும் மவுசு குறையாத நடிகராக இருந்து வருகிறார்.

எனவே ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இக்க சோசியல் மீடியாவில் அலப்பறை செய்து வருகிறார்கள். இவ்வாறு ஜெயிலர் படத்தின் பாடல்கள், படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் என அனைத்தும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.