இப்போ மட்டும் இல்லை அப்பொழுதும் நான் தான் கிங்க்..! 36 வருடங்களுக்கு மும்பு விக்ரம் படத்திற்கு அலைமோதிய கூட்டம்..!

kamal-hasan

தமிழ் சினிமாவில் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார்.  மேலும் இந்த திரைப்படம் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியாகிய திரைப்படம் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூர்யா பகத் பாஸில் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் சின்ன திரையில் பிரபலமாக வளம் வந்த நடிகைகளான ஷிவானி நாராயணன் மைனா நந்தினி மகேஸ்வரி போன்றவர்களும் நடித்து சிறப்பித்து கொடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்பட வசூலையும் மிஞ்சியது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில்  அதிக அளவு வசூலில் வென்ற திரைப்படம் என்றால் அது பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படத்தை கூறி வந்தார்கள் ஆனால் அந்த சாதனையையும் இந்த விக்ரம் திரைப்படம் முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பெற்றுவிட்டது.

ஆனால் இந்த விக்ரம் திரைப்படம் இதற்கு முன்பாக 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சி திரைப்படமாக அமைந்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் 36 வருடங்களுக்கு முன்பாக இந்த விக்ரம் திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தது மட்டுமில்லாமல் திரையரங்கில் வெளியில் பெரும் அளவு கூட்டத்துடன் காணப்பட்டது.

vikram-1
vikram-1

இந்த அறியா புகைப்படமானது சமீபத்தில் ரசிகர்கள்  தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு எழுந்த கூட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்ததாக வரப்போகும் விக்ரம் மூன்றாம் பாகத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.