சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் தற்பொழுது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின். இவர் மீடியோ மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால் காரணமாக மீடியோ உலகில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். அந்த வகையில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மீடியோ உலகிற்கு அறிமுகமானார்.
இதில் தனது சிறப்பான தொகுப்பை வழங்கியதன் மூலம் மீடியா உலகில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்திருந்த நிலையில் அவர் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா என்ற திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பும் கிடைத்தது. அதில் நடிக்க முதலில் தயங்கிய இவர் அந்த ரோல் சிறப்பாக இருந்ததால் அதனை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் சீரியல் ஆரம்பித்த காலகட்டத்தில் வெளிபுறத்தில் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் ஆரம்பத்திலேயே கல்யாண கோலத்தில் நடிக்கிறார் என்று ஒருசில விமர்சனங்களை எழுதினார்கள்.
இது ஜாக்லின் காதுக்கு வர உடனே அவர் சினிமாவுலகில் 35 வயது 45 வயதில் ஸ்கூல் ட்ரெஸ் போட்டுகிட்டு நடிக்கிறாங்க நான் 23 வயதுல இது மாதிரி நடிக்க கூடாதா என்று கேள்வியை எழுப்பினார்.
மேலும் பிச்சைக்காரியாக நடிக்க சொன்னாலும் கூட நான் தயக்கமே இல்லாமல் நடிப்பேன் எனவும் வெளிப்படையாகக் கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர் நீங்கள் மறைமுகமாக த்ரிஷாவையும் சமந்தாவையும் குறிப்பிடுவது போல சந்தேகம் எழுந்து உள்ளது எனவும் கூறி வருகின்றனர்.